சலசலப்பை ஏற்படுத்திய மோடி-ஓபிஎஸ் சந்திப்பு

மதுரை: மறைந்த முன்னாள் அதிபர் அப்துல் கலாம் அவர்களின் மணி மண்டபத் திறப்பு விழாவிற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்தில் தமிழகத்தின் தற் போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விழாவிற்குப் பிறகு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித் தார் பிரதமர் மோடி. ஓபிஎஸ் உடனான சந்திப்பு முற்றிலும் திட்டமிடப்படாத ஒன்று என்பதால் இது அரசியல் வட்டா ரத்தில் பெரும் சலசலப்பை ஏற் படுத்தியது. மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரை திரும்பிய பிரதமர் மதுரை விமான நிலையத்துக்குள் விருந்தி னர்கள் காத்திருக்கும் பகுதி வரை வருவதாகவும் அங்கு ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. எனவே ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் அங்கு மோடியின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

அதிமுகவின் இரு அணிகளை யும் பிரதமர் இணைத்து வைக்க உள்ளதாகவும் பேச்சுவார்த்தையில் எடப்பாடிப் பழனிசாமியும் பங்கேற் கலாம் எனவும் தகவல் வெளியான தால் பரபரப்பு அதிகரித்தது. இந்நிலையில், பிரதமர் மோடி மட்டும் ஓபிஎஸ், ஆதரவாளர் களிடம் தனியாக 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்க வில்லை. இச்சந்திப்பு குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மீனவர் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு வேண்டு மெனில் இந்தியக் கடல் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை வைத் தோம். நீட் தேர்வு உள்ளிட்ட தமி ழகத்தின் மிக முக்கிய பிரச்சினை களைத் தீர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம்,” என்றார். இதுகுறித்து மதுரை எம்எல்ஏ சரவணன், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் ஆகியோரிடம் கேட்டபோது, “கட்சிப் பிரச்சினை குறித்து ஏதும் பேசவில்லை. தமிழகம் சார்ந்த பிரச்சினை களைப் பற்றி மட்டுமே பேசினோம்,” என்றனர்.

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்குப் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி

கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் இருந்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பீதிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

12 Nov 2019

இயந்திரத் துப்பாக்கி ஏந்தி வந்த மணமக்கள்

ஓவியர் பிரணவைச் சந்தித்த முதல்வர் பினராயி, ஓவியரின் கால்களைப் பிடித்து 'கைகுலுக்கிப்' பாராட்டினார். படங்கள்: டுவிட்டர்

12 Nov 2019

கைகளின்றி 'கைகொடுத்த' ஓவியர்