கேப்டன் மிதாலி ராஜிக்கு ரூ.1 கோடி

மும்பை: இங்கிலாந்தில் அண்மையில் நடந்த பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணிக்குப் பரிசுகள் குவிந்து வருகின்றன. கிரிக் கெட் வாரியம் தலா ரூ.50 லட்சம் வழங்கி கௌரவித்தது. தங்கள் துறையில் பணியாற்றும் பத்து வீராங் கனைகளுக்குப் பதவி உயர்வும், ரூ.13 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப் படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இதே போல் அணியில் அங்கம் வகித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த பூனம் ரவுத், மந்தனா, ஆல்-ரவுண்டர் மோனா மேஷ்ரம் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்க அந்த அரசு முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் வசிக்கும் அணித்தலைவர் மிதாலிராஜ், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது மிதாலிராஜிக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையும் 600 சதுரஅடி அடுக்குமாடி வீடும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Loading...
Load next