சுடச் சுடச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை எளிதாக வீழ்த்தியது இந்தியா ‘ஏ’

இந்தியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியிடம் தோல்வியடைந்த இந்தியா ‘ஏ’ அணி, நேற்று ஆப்கானிஸ் தான் ‘ஏ’ அணியை எதிர்கொண்டது. பூவா தலையாவில் வென்ற இந்திய ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்தடித்தது. அக்சார் பட்டேல், சாகல் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் 40.5 ஒவரில் 149 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் ரஹ்மத் ஷா 35 ஓட்டமும், நஜிபுல்லா ஷத்ரான் 30 ஓட்டமும் ஷராபுதிர் அஷ்ரபு வெளியாகாமல் 39 ஓட்டமும் எடுத்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon