இலங்கையைத் தோற்கடித்து இந்தியா மாபெரும் வெற்றி

காலே: இலங்கையின் காலே மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடை யிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 26ஆம் தேதி தொடங்கி இன்று 30ஆம் தேதி வரை நடை பெறவிருந்தது. இந்நிலையில் நேற்று நான்காவது நாள் நடந்த ஆட்டத்திலேயே இந்தியா 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங் கையைத் தோற்கடித்து மாபெரும் வெற்றியைத்தட்டிச் சென்றது. இலங்கையில் இந்திய அணி பெற்ற பெரிய வெற்றி இது என்று கூறப்படுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வலுவான ஆட் டத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. கேட்ச்சை தவறவிடுதல், மோசமான பந்து வீச்சு போன்ற ஏராளமான தவறு கள் செய்தும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று டெஸ்ட் தொடரில் 1-0 என்ற புள்ளிகளை இந்தியா பெற்றுள்ளது. தேநீர் இடைவேளைக்குப் பின்பு ரவிச் சந்திரன் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் ஆறு விக்கெட்டு களை வெளியேற்றினர். இது இந்திய அணியை மாபெரும் வெற் றிக்கு இட்டுச்சென்றது. அணித்தலைவர் விராத் கோஹ்லி சதம் அடித்து அசத்தி னார். அனைத்துலக கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி அடித்த 17வது சதம் இதுவாகும்.

காலேயில் நடந்து வரும் இலங்கை - இந்தியாவுக்கான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று, இலங்கையின் ஆஞ்செலோ மேத்யூஸை வெளியேற்றிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி