வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக ஜான் கெல்லி நியமனம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து கடந்த ஆறு மாதங்களாக வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக ரெயின்ஸ் பிரேபஸ் பதவி வகித்து வந்தார். அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஓய்வு பெற்ற அமெரிக்க ஜெனரல் ஜான் கெல்லியை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக திரு டிரம்ப் நியமித்துள்ளார். ரெயின்ஸ் பிரேபஸ் வெள்ளை மாளிகையின் ரகசிய செய்திகளை ஊடகங்களிடம் வெளியிட்டு வருவதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள டிரம்பின் தகவல் தொடர்பு இயக்குநர் அண்டனி ஸ்காரமுச்சி கடந்த வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் ரெயின்ஸ் பிரேபஸை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து நீக்குவதாக அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஷான் ஸ்பைசர் பதவி விலகினார்.

Loading...
Load next