சுடச் சுடச் செய்திகள்

நவாஸின் சகோதரரை பிரதமராக்க திட்டம்

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் குற்றவாளியென அந் நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகிய நிலையில் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள் ளது. அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்க ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அவசரக் கூட்டம் நடத்தியதாக ஆளும் கட்சி உயர் தலைவர் ஒருவர் கூறினார். நவாஸ் ஷெரிஃப்பின் சகோதரரும் பஞ்சாப் மாநில முதலமைச்சருமான 65 வயது ஷபாஸ் ஷெரிஃப்பை புதிய பிரதமராக நியமிக்க ஆளும் கட்சி திட்ட மிட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் நாட்டின் பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண் டும். கடந்த 2015 ஆண்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பனாமா ஆவணத் தகவல்கள் கசிந்ததில் பல உலகத் தலைவர் களின் பெயர்களுடன் நவாஸ் ஷெரிஃப்பின் பெயரும் அவரது மகன்களின் பெயர்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

ஊழல் மூலம் சேர்த்த பெரும் பணத்தை பதுக்கி வைக்க பல தலைவர்கள் பனாமா நாட்டைத் தேர்ந்தெடுத்து அங்கு முதலீடு செய்திருப்பதாக பனாமா ஆவணத் தகவல்கள் கூறின. தான் தவறு எதுவும் செய்ய வில்லை என்று திரு நவாஸ் ஷெரிஃப் கூறி வந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் திரு நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளும் ஒருமனதாகத் தீர்ப் பளித்தனர். பிரதமர் பதவியில் இருக்கும் தகுதியை அவர் இழந்து விட்டதாக தீர்ப்புக் கூறப்பட்டது. நாடு கடந்து வரியற்ற தீவு நாடுகளில் உள்ள நிறுவனங்களில் சட்டவிரோதமாக பங்கு வைத்திருந்ததால் அவர் பிரதமர் பதவி வகிக்க தகுதி யில்லாதவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon