பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; 6 நாடுகள் பேச்சுவார்த்தை

ஜகார்த்தா: வெளிநாட்டு போராளிகளின் மிரட்டல் அதி கரித்து வருவது குறித்து விவாதிக்க இந்தோனீசியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளின் தலைமையில் ஆறு நாடுகள் சுலவேசியில் நேற்று பேச்சு நடத்தின. மலேசியா, பிலிப்பீன்ஸ், நியூசிலாந்து உள்ளிட்ட 6 நாடுகள் அந்தப் பேச்சுவார்த்தை யில் கலந்துகொண்டன. நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற அந்த ஆறு நாடுகளின் அமைச்சர்கள் தென்கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் குறித்தும் பயங் கரவாத சவால்கள் குறித்தும் விவாதித்தனர். ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாதக் குழுவினர் பிலிப்பீன்சில் வட்டார ரீதியில் இஸ்லாமிய நாட்டை உருவாக்க முயன்று வருவதால் ஏற்படும் கவலை குறித்தும் அவர்கள் விவாதித்தனர். பிலிப்பீன்சின் தென்பகுதி மராவி நகருக்குள் போராளிகள் ஊடுருவியதைத் தொடர்ந்து போராளிகளுக்கும் பிலிப்பீன்ஸ் ராணுவத்தினருக்கும் இடையே நீடித்த சண்டை குறித்தும் அக்கூட்டத்தில் அமைச்சர்கள் பேச்சு நடத்தினர். பல வாரங்களாக நீடித்த சண்டையில் பலர் கொல்லப் பட்டனர். அந்நகரத்தில் வீடு களும் கட்டடங்களும் தரை மட்டமாகின. நாம் அனைவரும் சேர்ந்து பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்த சந்திப்பு நல்லதொரு வாய்ப்பைக் கொடுத் திருப்பதாக இந்தோனீசிய பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon