சுடச் சுடச் செய்திகள்

பலத்த பாதுகாப்புடன் முன்னோட்ட நிகழ்ச்சி

மரினா பே மிதக்கும் மேடை நேற்று சிவப்பு, வெள்ளை நிறங்களில் மிதந்தது. அங்கு தேசிய தின அணிவகுப்பு முன்னோட்ட நிகழ்ச்சி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தின அணிவகுப்பு நடைபெறுவதற்கு முன் நேற்றைய நிகழ்ச்சி கடைசி ஒத்திகையாகவும் இடம்பெற்றது. நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் அணிவகுப்பைப் பார் வையிடும் அதிகாரியாகச் செயல் பட்டார். இம்மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற முதலாவது முன் னோட்ட நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அணி வகுப்பைப் பார்வையிட்டார். ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தின அணிவகுப்பை அதிபர் டோனி டான் கெங் யாம் அதிபர் என்ற முறையில் கடைசியாகப் பார்வையிடுவார். அடுத்த மாத இறுதியில் அதிபர் டானின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது.

அணிவகுப்பை நேற்று பார்வையிட்ட நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் (நடுவில்) ஜீப் வாகனத்திலிருந்து கொடியசைக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon