‘எஸ்ஜி செக்யூர்’ செயலி பதிவிறக்கம் கட்டாயம்

தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை ஆகியவற்றின் ஊழி யர்கள் ‘எஸ்ஜி செக்யூர்’ செயலி யைக் கட்டாயம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள் ளது. அதிருப்தியடைந்த தேசிய சேவையாளர்கள் சிலர் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்ய தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்ட னர் என்று அந்தச் செயலியின் இணையத்தளத்தில் கருத்து தெரிவித்ததை அடுத்து தற்காப்பு அமைச்சு இது தொடர்பான விளக் கத்தை அளித்தது.

கட்டங்கட்டமாக அறிமுகப் படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘எஸ்ஜி செக்யூர்’ செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை ஊழியர் கள் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொள்ளப் பட்டது. “முதற்கட்டமாக, தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை ஊழியர்கள் ‘எஸ்ஜி செக்யூர்’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன் மூலம் செயலியில் உள்ள பயங்கர வாதம் தொடர்பான மின்னியல் கற்றல் அனுபவங்களை அவர்கள் பெறமுடியும்,” என்று அறிக்கையில் விளக்கப்பட்டது.

‘எஸ்ஜி செக்யூர்’ செயலி. படம்: தற்காப்பு அமைச்சு

Loading...
Load next