திருமாவளவன்: சாதி, மத வெறியர்களைக் கைது செய்க

சென்னை: தமிழகத்தில் வன்கொடுமை நடப்பதைத் தடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் வலியுறுத்தி உள்ளார். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சாதி, மத வெறியர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தொடர்ச்சியாகத் தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கைவிடப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சி சாதி வெறியைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேட முயற்சிப்பதாகச் சாடிய திருமாவளவன், தமிழக மக்கள் நலன் சார்ந்த எந்தப் பிரச்சினைக்கும் அந்தக் கட்சி குரல் கொடுக்கவில்லை என்றார். “ஆனால் தங்கள் கட்சியின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாலும் இனி அதிமுக, திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர முடியாது என்பதாலும் தலித் மக்களைக் குறி வைத்து வாக்கு வங்கியை அதிகரிக்க இப்படிச் செயல்படுகிறார்கள். “அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள். தலித்துகள் தலைதூக்கி விடக்கூடாது என்றும் நினைக்கிறார்கள். தமிழக அரசு இத்தகைய போக்கை அறவே அனுமதிக்கக் கூடாது,” என்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வரும் 30ஆம் தேதி விஜயவாடாவில் நடக்கும் விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி (இடக்கோடி) பதவியேற்கயுள்ள தாகக் கூறப்படும் நிலையில், திருப்பதி ஏழுமலையான கோவில் அர்ச்சகர்கள் அவரைச் சந்தித்து ஆசி வழங்கினர். படம்: இணையம்

26 May 2019

ஜெகன்மோகன்: ஆண்டவன் தண்டனை கொடுத்துவிட்டார்

கட்டடத்தின் மாடிகளில் மூண்ட தீயைக் கட்டுப்படுத்த 19 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. படம்: இணையம்

26 May 2019

சூரத்: பயங்கர தீ விபத்தில் 21 மாணவர்கள் பரிதாப பலி