சுடச் சுடச் செய்திகள்

ஸ்டாலின்: அதிமுக ஒரு சர்க்கஸ் கூடாரம்

சென்னை: தமிழக ஆட்சியாளர்கள் பாஜகவிடம் மண்டியிட்டு, சரணா கதி அடைந்திருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். முதல்வர் பழனிசாமியும் தமிழக அமைச்சர்களும் தங்கள் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளாக இருக்கக்கூடிய வரு மான வரித்துறையினர் தொடர்ந் துள்ள வழக்குகள், அமலாக்கத் துறை வழக்குகள், குட்கா விவ காரம் ஆகியவற்றில் இருந்து தங் களைப் பாதுகாத்துக்கொள்ளவ தில் மட்டுமே முனைப்பாக உள்ளதாக அவர் சாடியுள்ளார். அதிமுக ஒரு சர்க்கஸ் கூடாரம் என்றும் குட்கா ஊழல் ஒன்றே எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கவிழ்க்கும் என்றும் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார். “சர்க்கசில் இருப்பது போலவே அதிமுகவிலும் சில கோமாளிகள், சில ரிங் மாஸ்டர்கள் இருக்கி றார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு வர் என ஆளுக்கு ஓர் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

“நாங்கள் ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாகப் பிரசாரம் செய்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லை. குட்கா ஊழல் ஒன்றே அவர்கள் ஆட்சியைக் கவிழ்க்கப் போகிறது,” என்றார் மு.க. ஸ்டாலின். தமிழக மாணவர்களின் எதிர் காலத்தைக் குட்டிச்சுவராக்கும் வகையில், பாழடிக்கும் விதமாக அதிமுக அரசு செயல்படுவதாகச் சாடிய அவர், பிரதமர் மோடி தமி ழகம் வந்தபோது, நீட் தேர்வு குறித்து அவரிடம் பேசி உரிய அழுத்தம் கொடுத்தாரா என்பது குறித்து தமிழக முதல்வர் இது வரை வாய் திறக்கவில்லை என்றார். மாணவர்கள் பற்றி தமிழக அரசு கிஞ்சிற்றும் கவலைப்பட வில்லை என்றார் ஸ்டாலின்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon