சட்டத்தை நிறைவேற்ற மறந்த அதிமுக அரசு: சாடும் நல்லக்கண்ணு

சென்னை: எம்ஜிஆரால் கொண்டு வரப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற அதிமுக மறந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியுள்ளார். சட்டத்தை மறந்த அதிமுக அரசு, தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்று சென்னையில் பேரணி ஒன்றைத் தொடங்கிவைத்தபோது அவர் தெரிவித்தார். “480 நாட்கள் பணி செய்தால் பணி நிரந்தரம் என்ற சட்டம் எம்ஜிஆரால் கொண்டு வரப்பட்டது. அதைத்தான் அதிமுக அரசு மறந்துவிட்டது. “‘நீட்’ தேர்வு விவகாரத்தில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை அதிபரின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமலேயே மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற முயற்சிக்கவில்லை. மாறாக நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசு திணிக்கிறது,” என்றார் நல்லக்கண்ணு.

Loading...
Load next