நான்கு கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் அனைத்துலக சந்தை மதிப்பு ரூ.1.14 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இப்ராகிம் மரைக்காயர் என்பவர் தனது பெட்டியில் மற்ற பொருட்களுக்கு மத்தியில் 4 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு