நாராயணசாமி: பூச்சாண்டி காட்டுகிறது மத்திய அரசு

புதுவை: மத்திய அரசு தொடர்ந்து பூச்சாண்டி வேலை காட்டி வருவதாகப் புதுவை முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசின் மிரட்டல்களுக்கு புதுவை அரசு எந்தக் காலத்திலும் பணிந்து போகாது என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “புதுவையில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மாநில அரசு முனைப்பாக உள்ளது. ஆனால் மாநில அரசின் செயல்பாட்டுக்கு அதிகாரிகள்தான் முட்டுக்கட்டை போடுகின்றனர். “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பூச்சாண்டி வேலை காட்டி வருவதை முதலில் நிறுத்த வேண்டும். இத் தகைய போக்கை ஒரு போதும் ஏற்க இயலாது,” என்றார் நாராயணசாமி.