கனமழை எதிரொலி; 30 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் 4 அடி வரை உயர்ந்துள்ளது. தற்போது நீர்மட்டம் 30 அடியைத் தாண்டியுள்ளது. கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு வரை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 200 கன அடியாக மட்டுமே இருந்தது. தற்போது அது சுமார் 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon