சுடச் சுடச் செய்திகள்

இங்கிலாந்தில் ஆர்யா பங்கேற்கும் 1,450 கி.மீ. சைக்கிள் போட்டி

இங்கிலாந்தில் நடைபெற உள்ள ‘எல்இஎல் 2017’ எனப் பெயரிடப்பட்டுள்ள 1,450 கிலோமீட்டர் சைக்கிள் பந்தயத்தில் நடிகர் ஆர்யா விருப்பத்துடன் பங்கேற்க உள்ளார். இது சினிமா கதையல்ல. உண்மை யான சைக்கிள் போட்டி. சைக்கிள் ஓட்டுவது என்றால் ஆர்யா வுக்கு தனி ஆர்வம் என்பதால் இன்று 30 ஆம் தேதி நடைபெற உள்ள சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்க பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ‘ஸ்பான்சர்’ செய்துள்ளது. தமிழ், மலையாளம் என நடிப்பில் பரபரப்பாக வலம் வந்தாலும் விளையாட்டு, உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் ஆர்யா. அதிலும் ‘சைக்கிளிங்’ என்றால் இவருக்கு அதிக ஆர்வம் உள்ளது. ஆர்யா தான் மட்டும் ‘சைக்கிளிங்’ செல்லாமல் தன்னுடைய சக நடிகர் களுக்கும் சைக்கிள் ஓட்டுவதன் அவ சியத்தை கூறி அதிகாலையிலேயே பெரும்பாலானோரை சைக்கிள் ஒட்ட வைத்த பெருமை இவரையே சேரும். இந்நிலையில் லண்டன் ஈடன் கார்டன் மைதானத்தில் ‘லண்டன் 2017’ என்ற சைக்கிள் பந்தயம் ஒன்று ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon