சமந்தா போட்டுள்ள புதிய நிபந்தனை

சிவகார்த்திகேயனுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் சமந்தா இயக்குநரிடம் சில புதிய நிபந்தனைகளைக் கூறியிருக்கிறாராம். சிவகார்த்திகேயனுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்த சமந்தா, “வெயில் அதிகமாவதற்கு முன்பு தனது காட்சிகளைப் படமாக்க வேண்டும். அல்லது வெயில் குறைந்த பிறகே நடிக்கிறேன். முடிந்த வரை நேரடியாக என் மீது வெயில் படாதவாறு படப்பிடிப்பை நடத்த வேண்டும்” என்று இயக்கு நரிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. சமந்தாவுக்கு ஏற்கெனவே தோல் அலர்ஜி பிரச்சினை உள்ளது.

எனவே தான் இந்த நிபந்தனையை விதித்திருப்பதாக தெரிகிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், பொன்ராம், சூரி, டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக் கின்றனர். ‘ரெமோ’, ‘வேலைக் காரன்’ படங்களைத் தயாரித்த 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை யும் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவ கார்த்திகேயனின் தந்தையாக நெப் போலியனும், வில்லியாக சிம்ர னும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon