மூத்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சமூக நிகழ்வு

தெலுக் ஆயர் சாலையிலுள்ள இரு தேசிய நினைவுச் சின்னங் களை சுற்றிப்பார்த்து தேசிய தின பாடல்களைப் பாடி கொண்டாட்ட உணர்வில் இறங்கினர் அங்கு திரண்டிருந்த சுமார் 150க்கு மேற் பட்ட மூத்தோர். தேசிய நினைவுச் சின்னங்களான 'சிங்கப்பூர் யூ ஹுவாங் கொங்' சீன ஆலயமும் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையமும் இணைந்து மூத்தோருக்காக இந்நிகழ்ச்சியை நேற்று ஏற்பாடு செய்தன. சிங்கப்பூரின் 52வது பிறந்த நாளைக் குறிக்கும் விதமாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

தெலுக் ஆயர் கிரீன் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மூத்தோர் சுலபமான உடற்பயிற்சி உத்தி களை கற்றுக்கொண்டு வெவ்வேறு மொழிகளிலும் பாடல்களைப் பாடி ஹலால் முறையில் தயார் செய் யப்பட்ட உணவைச் சுவைத்தனர்.

“இந்த தெலுக் ஆயர் சாலை யில் பல வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு இது வாய்ப்பளிக்கின்றது. எந்த ஒரு சமூக நிகழ்ச்சியை நடத்தினாலும் தனித்து அதனை செய்யாமல் அருகில் அமைந்துள்ள சமய பங் காளிகளுடன் இணைந்து செயல் பட முனைகிறோம். இது பல இன ஒற்றுமையை வெளிக்காட்ட ஒரு நல்ல தளம்,” என்றார் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தின் நிர்வாகக் குழு செயலாளர் திரு நசீர் கனி.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் விதமாக அமைந்திருந்த சமூக ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.

படம்: நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்