குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் நிகழ்வுகள்

நாளை (ஆக.1) தொடங்கும் ‘என் எஸ்50’ வாரத்தையொட்டி தேசிய சேவையாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பல்வேறு வித மான நிகழ்ச்சிகளை எதிர்பார்க்க லாம். தேசிய சேவை கருப்பொருளு டன் கூடிய சுற்றுலா, உடற்பயிற்சிக் கூடத்துக்கும் நீச்சல் குளத்திற்கும் இலவச அனுமதி, தேசிய சேவை தொடர்பான பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்பு ஆகியன அவற் றுள் சில. தேசிய சேவையாளர் குடும்பங் களின் ஆதரவுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக பெரும்பாலான நிகழ்ச்சி கள் குடும்பப் பிணைப்பை வளர்க் கும் விதமாக இடம்பெறும்.

‘ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்’ மன்றமும் சிங்கப்பூர் அறிவாலயமும் இணைந்து நடத்தும் என்எஸ்50ஐ கொண்டாடுவோம் என்னும் பய ணச் சுற்றுலா அந்த நிகழ்ச்சிகளுள் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆகஸ்ட் 5ஆம் தேதி இது நடைபெறும். பயணச் சுற்றுலாவின் நடவடிக் கைகளில் ஒன்றாக சாஃப்டி=பாசிர் லாபா பேருந்து சுற்றுலாவும் ஒன்று. பாசிர் லாபா முகாமிற்காக நடத் தப்படும் முதல் பேருந்து சுற்று லாவாக அது இருக்கும். சாஃப்டி டவர், பெங் காங் மலை, உள்ளரங்க துப்பாக்கிச்சூட்டு பயிற்சி நிலையமான மல்டி மிஷன் ரேஞ்ச் காம்ப்ளக்ஸ் போன்று குறிப் பிடத்தக்க அம்சங்களை இந்த உல்லாசப் பயணத்தில் பங்கேற் போர் காணமுடியும்.

திடமான குடும்ப ஆதரவு என் பது தேசிய சேவையை ஆதரிக்கும் அடிப்படையான அம்சம் என்பதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்த உல்லாசப் பயணம் அமையும் என்று ‘ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்’ மன்ற உறுப்பினர் பிரிகேடியர் ஜெனரல் இஷாக் இஸ்மாயில், 54, தெரிவித்துள்ளார். தேசிய சேவை கருப்பொருளு டன் மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் முதல் பேருந்து சுற்றுலா இதுவா கும். ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் தோ பாயோ ஹப்பில் நடைபெற இருக் கும் ‘கெட் ஆக்டிவ் அண்ட் செலிப்ரேட் என்எஸ்50’ என்னும் விளையாட்டு விழாவும் குடும்ப நிகழ்வுகளில் ஒன்று.

இந்த இரு நாட்களிலும் முன் னாள், இந்நாள் தேசிய சேவை யாளர்கள் தங்களது குடும்பத்தி னரையும் நண்பர்களையும் ‘ஆக் டிவ்எஸ்ஜி’ உடற்கட்டு நிலையத் திற்கும் நீச்சல் குளங்களுக்கும் இலவசமாக அழைத்துச் செல்ல லாம்.

என்எஸ்50 இசைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘வீ ஆர் த பீப்பள்’ என்னும் பாடல் பதிவில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் பாடகர் நேதன் ஹடோனோவும். படம்: தற்காப்பு அமைச்சு