வடகொரியாவுக்கு போட்டியாக அமெரிக்க போர் விமானங்கள்

வா‌ஷிங்டன்: வடகொரியா அண் மையில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி மிரட் டிய சூழ்நிலையில் அதற்குப் பதி லடி தரும் வகையில் அமெரிக் காவின் குண்டு வீசும் விமானங்கள் கொரிய தீபகற்பத்தில் பறந்து உள்ளன. அமெரிக்காவின் ‘பி-1பி’ குண்டு வீசும் விமானங்களுடன் தென் கொரியா, ஜப்பானிய விமானப் படைகளின் போர் விமா னங்களும் இணைந்துகொண்டன. பத்து மணி நேரம் நடைபெற்ற பயிற்சியில் ஏவுகணைகளை வழி மறித்துத் தடுக்கும் ஆற்றலை மூன்று நாடுகளும் பரிசோதித்துள் ளன. கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று இரண்டாவது முறையாக கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்த வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்காவின் எந்த இலக்கையும் தாக்கும் வல் லமையைப் பெற்றுள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து கொரிய ஆகாய வெளியில் நேற்று அமெரிக்க குண்டு வீசும் விமானங்கள் வலம் வந்துள்ளன. அமெரிக் காவின் பசிபிக் விமானப் படை களின் தளபதியான ஜெனரல் டெரன்ஸ் ஓ ஷாக்நெஸ்ஸி, “வட்டார நிலைத்தன்மைக்கு வட கொரியா தொடர்ந்து மிரட்டலாக விளங்கு கிறது. எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் உடனடியாக களத்தில் இறங்கவும் தயாராக இருக்கிறோம்,” என்றார் அவர்.

டிரம்ப் ஏமாற்றம்

இதற்கிடையே சீனா அதன் நட்பு நாடான வடகொரியாவை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். “சீனாவிடம் ஏமாற்றம் அடைந் துள்ளேன். நமது கடந்தகால முட் டாள் தலைவர்கள், ஆண்டுதோறும் சீனா நூற்றுக்கணக்கான பில் லியன் டாலர்களுக்கு வர்த்தகம் செய்ய அனுமதித்தனர். அப்படியும் சீனா நமக்கு எதுவும் செய்ய வில்லை,” என்று டுவிட்டர் பதி வில் டிரம்ப் குறிப்பிட்டார். “அனால் இதை இனிமேலும் அனுமதிக்க மாட்டோம். இருப் பினும் இந்தப் பிரச்சினையை எளிதில் சீனா சமாளித்துவிடும்,” என்றார் திரு டிரம்ப். வடகொரியாவை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று பலமுறை சீனாவை அமெரிக்கா வற்புறுத்தி வந்தாலும் பேச்சுவார்த்தை மூலமே வடகொரியா பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று சீனா கூறிவருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போலிசுக்கு ஆதரவாகப் பேரணியில் ஈடுபட்ட ஹாங்காங் மக்கள்மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். படம்: ராய்ட்டர்ஸ்

16 Nov 2019

ஹாங்காங்கில் போலிசுக்கு ஆதரவாக பேரணி

தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பிய கிரேக், வேறு வழியின்றி முதலையின் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டி, அதன் கவனத்தை திசைதிருப்ப வேண்டியதாயிற்று. படம்: அன்ஸ்பிளாஷ்

16 Nov 2019

முதலையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்