சுடச் சுடச் செய்திகள்

தைவானைத் தாக்கிய மற்றொரு சூறாவளி; 103 பேர் காயம்

தைப்பே: தைவானை இரண்டு நாட்களில் இரண்டு சூறாவளிகள் தாக்கியதில் குறைந்தது 103 பேர் காயம் அடைந்தனர் என்று அந் நாட்டின் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஏராளமான இடங்களில் மின் விநியோகிப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று ‘நெசாட்’ என்ற சூறாவளி தாக்கியதில் தைவானின் பெரும் பகுதிகள் நிலைகுத்திவிட்டன. இதன் காரணமாக 15 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து பிங்டுங் கின் தெற்கு வட்டாரங்களில் 58 செ. மீட்டர் அளவுக்கு கனமழை பெய்தது. இந்தச் சூறாவளிக்குப் பிறகு நேற்று ‘ஹாய்டாங்’ என்ற மற் றொரு சூறாவளி தெற்கு தீவுகளை நோக்கி நகர்ந்தது.

இதனால் இரண்டாவது சூறாவளி குறித்து பொதுமக் களுக்கு அரசாங்கம் எச்சரித்தது. ஆனால் தைவானின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் இதற்கு முன் இரண்டு சூறாவளி குறித்து அரசு எச்சரித்ததில்லை. “ஹாய்டாங் தொடர்ந்து வலுப் பெற்று வருவதால் தைவானின் தெற்குப் பகுதிகளில் கனமழை பெய்கிறது என்று வானிலை ஆய்வாளர் லின் டிங்-ஐ தெரி வித்தார். சனிக்கிழமை 10,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் நிவாரணப் பணிகளில் 5,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடு பட்டுள்ளனர். பெரும்பாலான ரயில் சேவைகளும் 300க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து அல்லது தாமத மாகியுள்ளன. சூறாவளியில் குறைந்தது 150 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் ஏறக்குறைய அரை மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.

தைவானை சூறாவளி தாக்கியதில் தடுமாறி கீழே விழுந்த ஒருவர். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon