பாகிஸ்தானில் பிரதமர் மாற்றம்

இஸ்லாமாபாத்: ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டு நவாஸ் ஷெரிஃப் பதவி விலகியதால் அவருக்குப் பதிலாக புதிய பிரதமர் சுமூகமான முறையில் பதவியேற்பார் என்று ஆளும் கட்சி அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நாடாளு மன்ற சிறப்புக் கூட்டத்தில் இடைக்கால பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று நவாஸ் ஷெரிஃபின் ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்’ கட்சி கூறியது.