ஜோகூரில் அதிரடி சோதனை; 54 வெளிநாட்டு பெண்கள் கைது

ஜோகூர்: ஜோகூர் பாருவில் உள்ள பொழுதுபோக்கு விடுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 54 வெளிநாட்டுப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இது குறித்து விளக்கம் அளித்த ஜோகூர் காவல்துறை தலைவரான ஆணையர் வான் அஹமட் நஜ்முடின் முஹமட், சனிக்கிழமை கைது செய்யப்பட்டவர்களில் 46 வியட் நாமியர்கள், ஏழு சீனா நாட்டவர்கள், ஒருவர் இந்தோனீசியர் என்று கூறினார். பெண்கள் அனைவரும் 19 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள். இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் ஜோகூரில் உள்ள பொழுதுபோக்கு விடுதிகள், உடற்பிடிப்பு நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் ஜோகூர் காவல்துறையினர் 813 அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர்.