ஸ்கூலிங்: தோல்வி ஒரு நல்ல பாடம், மீண்டு வருவேன்

புடாபெஸ்ட்: ஃபினா எனும் உலக வெற்றியாளர் நீச்சல் போட்டியின் 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் தங்கம் வெல்லாதது ஏமாற்றமே என்று கூறியுள்ளார். இதே பிரிவில்தான் அவர் கடந்த ஆண்டின் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அதனால் ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஸ்கூலிங் 50.83 வினாடிகளில் போட்டியை முடித்தார். ஆனால் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. தங்கப்பதக்கத்துக்கும் அவருக்கும் இடையே ஒரு வினாடி இடைவெளி தான்.

அமெரிக்காவின் கேலப் டிரஸ்ஸல் 49.86 வினாடிகளில் போட்டியை முடித்து தங்கம் வென் றார். ஹங்கேரியின் கிறிஸ்டோஃப் மிலாக் 50.62 வினாடிகளில் முடித்து வெள்ளியைத் தட்டிச் சென்றார். ஸ்கூலிங் முடித்த அதே நேரத்தில் பிரிட்டனின் ஜேஸ் ஜய் போட்டியை முடித்து வெண்கலப் பதக்கத்தை ஸ்கூலிங்குடன் பகிர்ந்துகொண்டார். ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஆறு மாதங்கள் பயிற்சி செய்யாமல் ஓய்வு எடுத்துக்கொண்டது தவறு என்று இப்போது உணர்வதாக ஸ்கூலிங் கூறினார். “என் பயிற்றுவிப்பாளர் அப்போதே என்னை எச்சரித்தார்.

ஆனால் நான்தான் அவரை அலட்சியம் செய்துவிட்டேன். இந்தக் கிழவருக்கு என்ன தெரியும் என மெத்தனமாக இருந்துவிட்டேன். “அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது புரிகிறது. பட்டால்தான் புரியும் என்பதைப் போல் ஆகிவிட்டது. “என் செயல்பாட்டைக் கண்டு நான் மிகுந்த ஏமாற்றம் அடைகிறேன்,” என்று போட்டிக்குப் பிறகு தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவர் கூறினார். எனினும் அடுத்த மாதத்தில் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள ஸ்கூலிங்,22, அடுத்த அனைத் துலக நீச்சல் போட்டிகளுக்காகத் தொடர்ந்து பயிற்சி மேற்கொள் ளவிருப்பதாகத் தெரிவித்தார்.

ஃபினா எனும் உலக வெற்றியாளர் நீச்சல் போட்டியில் இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே சிங்கப்பூர் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

(இடமிருந்து) மலேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் சயட் சடிக், மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஃபெரான் சொரியானோ.

25 May 2019

மான்செஸ்டர் சிட்டி குழு உரிமையாளரின் மலேசிய முதலீடு

லண்டனில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்கும் அணிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து 

நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லியும் பாகிஸ்தான் 

அணித் தலைவர் சர்ஃபராஸ் அகமதுவும். படம்: ஆண்ட்ரூ போயர்ஸ்

25 May 2019

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து 

மகேந்திர சிங் டோனி. படம்: ஏஎஃப்பி

25 May 2019

சச்சின்: டோனி ஐந்தாவது  வரிசையில் ஆட வேண்டும்