விராத் கோஹ்லி: இலங்கைக்கு எதிரான வெற்றி சிறப்புமிக்கது

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி மிகவும் சிறப்புமிக்கது என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறியுள்ளார். இந்தியா=இலங்கை அணிகள் மோதிக்கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது டெஸ்ட் அரங்கில் இலங்கை அணிக்குக் கிடைத்த மிக மோசமான தோல்வி ஆகும். போட்டிக்குப் பின்பு பேசிய கோஹ்லி இந்திய அணியின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டினார்.

“இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் வெற்றி, இந்திய பந்து வீச்சாளர்களின் திறமைக்கு எடுத்துக்காட்டு. இந்திய அணியை வீழ்த்துவதற்கு யார் திட்டம் தீட்டுகிறார்கள் என்பது பற்றி கவலையில்லை, இந்திய அணியின் திறமை என்ன என்பதை நாங்கள் காட்டி விட்டோம்,” என்று அவர் கூறினார். “கடந்த முறை (2015ஆம் ஆண்டு) இங்கு நடந்த டெஸ்ட்ட் போட்டியில் (176 ஓட்டங்கள் இலக்கு) வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்தத் தோல்வி எங்களது மனஉறுதியை பாதித்தது. ஆனால் இந்த முறை ஒருங்கிணைந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம்.

மேலும் இப்போது நாங்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறோம். ஒவ்வொருவரும் பொறுப்புடன் ஆடினர். “கடந்த முறை இங்கு விளையாடியதுடன் ஒப்பிடும் போது ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. அதாவது ஆடுகளம் பந்து வீச்சுக்குப் பெரிய அளவில் ஒத்துழைப்புத் தரவில்லை. இதனால் பந்து வீச்சாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon