தமிழகத்துக்கு 60 மாவட்டங்கள் தேவை: ராமதாஸ் புதிய யோசனை

வேலூர்: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை அறுபதாக அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். திருப்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

“தமிழகத்தில் அதிக மக்கள் தொகை உள்ள மாவட்டங்களில் வேலூர் மூன்றாம் இடம் வகிக்கிறது. உலகில் உள்ள 233 நாடுகளில் 101 நாடுகளில் வேலூர் மாவட்டத்தை விட மக்கள் தொகை குறைவு. அதேபோல் புதுவை, கோவா உட்பட ஏழு யூனியன்களில் வேலூர் மாவட்டத்தைக் காட்டிலும் மக்கள் தொகை குறைவாக உள்ளது,” என்று ராமதாஸ் சுட்டிக்காட்டினார். தமிழகத்தை அறுபது மாவட்டங்களாகப் பிரிப்பது தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Loading...
Load next