சுடச் சுடச் செய்திகள்

தனுஷ்கோடியில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து வசதி

ராமேசுவரம்: சரியாக 53 ஆண்டு களுக்குப் பிறகு தனுஷ்கோடிக்குச் சென்றுவர புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப் பேருந்து போக்குவரத்தும் துவங்கி உள்ளது. கடந்த 1964ஆம் ஆண்டு வீசிய பெரும் புயலில் சிக்கி ஒட்டுமொத்த தனுஷ்கோடி நகர மும் உருக்குலைந்து போனது. பெரும் தொழில் நகரமாக, வியா பாரச் சந்தையாக விளங்கிய தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பில் சிக்கி முழுமையாக அழிந்தது. அதன் பின்னர், மக்கள் அங்கு வசிக்க அஞ்சினர். எனினும் சிதைந்த நிலையில் உள்ள தனுஷ் கோடிக்குச் சென்றுவர இன்றளவும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

எனினும் இதுநாள் வரை, ராமேசுவரத்தில் இருந்து தனுஷ் கோடியின் முகுந்தராயர் சத்திரம் வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் வாகனத்தில் சென்றுவர முடிந்தது. மோசமான சாலையாக இருந்ததால் தனுஷ்கோடி சென்று திரும்புவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடியின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை கடற்கரை வரை ஒன்பதரை கிலோ மீட் டர் தூரத்திற்குப் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பகுதிக்கு ராமேசுவரத்தில் இருந்து அரசுப் பேருந்துப் போக்குவரத்து தொடங் கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏராளமானோர் பேருந்துகளில் சென்று தனுஷ்கோடியைக் கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon