சுடச் சுடச் செய்திகள்

நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய ‘இமை’

பொதுவாக மலையாள இயக்குநர் கள் தமிழில் இயக்கும் படங்க ளுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக உள்ளது. இயக்குநர் கள் பாசில், சித்திக், ஷாஜி கைலாஷ் ஆகிய இயக்குநர்களின் படங்களே இதற்கு நல்ல உதாரணம். இந்நிலையில் மேலும் ஒரு மலையாள இயக்குநர் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத் துள்ளார். அவர் விஜய்.கே. மோகன். மலையாளத்தில் ‘நளசரி தம் நாலாம் திவசம்’, ‘வேனல் மரம்’ உட்பட ஏராளமான படங் களை இயக்கிய இவர், தமிழில் ‘இமை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சரிஷ், அட்சய பிரியா இருவரும் ஜோடி சேர்ந் துள்ளனர். சரி‌ஷுக்கு இதுதான் முதல் படம். அட்சய பிரியாவுக்கு ஏற்கெனவே இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்த அனுபவம் உண்டு.

நடிகர் பிரகாஷ் ராஜின் மைத்துனரும் நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரருமான அருண் திருமொழிவர்மன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று கூறும் விஜய்.கே.மோகன், அந்தக் கனவு தற்போது நிறைவேறி இருப்பதாக உற்சாகத்துடன் சொல்கிறார். திறமைகளுக்கும் புதுமை களுக்கும் தமிழில் என்றும் வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை தமக்கு எப்போதுமே உண்டு என்று குறிப்பிடுபவர், அந்த நம்பிக்கைதான் தமிழில் படம் இயக்க தமக்குத் தைரியம் அளித்ததாகத் தெரிவிக்கிறார். “இது நூறு விழுக்காடு காதல் கதை. கரடு முரடான பாறை போன்ற வாலிபனுக்கும் பலாப்பழம் போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதலைப் பற்றித்தான் இப்படம் பேசுகிறது.

‘இமை’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் நாயகன் சரிஷ், நாயகி அட்சய பிரியா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon