சிம்புவின் புதுப்பட அறிவிப்பு

தனது புதுப்படம் குறித்த அறிவிப்பைத் தற்போது வெளியிட் டுள்ளார் சிம்பு. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை சிம்பு ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த் திருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அப்படம் பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் முன்பே முக்கால் வாசி படமாக்கப்பட்ட ‘கெட்ட வன்’ என்ற படத்தை சிம்பு மீண் டும் தூசி தட்டி இருப்பதாகத் தக வல் வெளியானது. மேலும் ‘பில்லா’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டது. இதனால் எரிச்சல் அடைந்த அவர், தனது புதுப்படம் குறித்த ஆருடச் செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என்றும் தாமே உரிய நேரத்தில் தகவல் வெளியிடுவதாகவும் தெரிவித்தி ருந்தார்.

இந்நிலையில் தமது அடுத்த படம் குறித்த தகவலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட் டுள்ளார் சிம்பு. “‘கெட்டவன் கெட்டிடில் கிட்டி டும் ராஜயோகம்’. யுவன் சங்கர் ராஜா இசையில் சிலம்பரசன். டி.ஆர். படம். ஏழு முறை விழுந்து விட்டேன், எட்டாவதாக எழு வேன்,” என்று டுவிட்டர் பதிவில் சிம்பு குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், “அந்தப் படத்தில் பாடல்கள் எதுவும் கிடை யாது, இடைவேளை கிடையாது, எனவே கழிவறையை முன்பே பயன்படுத்திவிடுங்கள். படம் துவங்கும் முன்பே குளிர்பானங் கள், பாப்கார்னை வாங்கிவிடுங் கள், பார்க்காததைப் பார்க்கப் போகிறீர்கள். இந்த செப்டம்பர் 2017ல் படம் வெளியாகும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon