பிறர் நலம் பேணும் தாதியர் பணியில் விருப்பம்

வில்சன் சைலஸ்

சாதாரணநிலைத் தேர்வுக்கான முன்னோட்டத் தேர்வில் ஃபாரா பெற்றது 30 புள்ளிகள். ‘ஓ’ நிலைத் தேர்வு எழுத இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், தேர்வுக்காகத் தீவிரமாகத் தயா ராகிக்கொண்டிருந்த 17 வயது சித்தி சஃப்ரின் ஃபாரா, அந்தக் காலகட்டத்தில் தந்தையை இதய நோய்க்குப் பலிகொடுத்தார். உலகமே இடிந்துபோனதற்கு ஒப்பான துயரத்தில் ஆழ்ந்திருந்த ஃபாராவுக்கு ‘கல்வி ஒன்றே பக்கபலம்’ என்ற தந்தையின் சொற்கள் உத்வேகம் அளித்தன. வாழ்வில் உற்ற தோழனாக தமது தந்தையார் இருந்ததாகச் சொன்ன ஃபாரா, அவரது கூற்றை நன்கு உணர்ந்து செயல்பட்டு, ‘ஓ’ நிலைத் தேர்வில் மொத்தம் 10 புள்ளிகள் பெற்றார்.

சிறப்புத் தேர்ச்சி பெற்றதால் தொடக்கக்கல்லூரிக்குச் செல் லுமாறு எத்தனையோ பேர் அறிவுறுத்தியபோதும் ஃபாராவின் விருப்பமாக அமைந்தது தாதிமைத் துறை. பலதுறைத் தொழிற்கல்லூரிக் குச் சென்றபோதும் உயிர்மருத் துவத் துறையைத் தேர்ந்தெடுக்கு மாறு அவரது உறவினர்கள் வற்புறுத்தியதாகச் சொன்ன ஃபாராவுக்கு, தாதிமைத் துறையில் சேருவது நீண்டகாலக் குறிக் கோள். இதய நோயால் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்த தந்தையால் மருத்துவமனைச் சூழல் ஃபாராவுக் குப் பழக்கமாகி இருந்தது.

பள்ளி முடிந்து மருத்துவ மனைக்குச் சென்று தந்தையைப் பார்க்கும் வழக்கம் தொடக்கநிலை இரண்டிலேயே ஃபாராவுக்குத் தொடங்கியது. “என் தந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்தான் முத லில் என் கவனத்தை ஈர்த்தனர். அவர்களைப்போல் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது,” என்ற ஃபாரா, காலப்போக்கில் தாதியர் கள் சேவையின் உன்னதத்தைப் புரிந்துகொண்டதாகக் கூறினார்.

சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கிடமிருந்து உபகாரச் சம்பளத்துக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் சித்தி சஃப்ரின் ஃபாரா.