சுடச் சுடச் செய்திகள்

பாஜக கூட்டணியில் அதிமுக; மத்திய அமைச்சரவையில் இடம்

தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது அதிமுக என்றாலும் உண்மையில் பாரதிய ஜனதா கட்சிதான் அதைப் பின்னிருந்து இயக்குகிறது என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் விரைவில் கை கோக்க இருக்கிறது என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்குப் பிரதி உபகாரமாக, அதிமுக எம்.பி.க்கள் சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவை விரை வில் மாற்றி அமைக்கப்படலாம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் அதிமுகவையும் அதில் இடம்பெற வைக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. அதிமுகவை தேசிய ஜன நாயகக் கூட்டணிக்கு இழுக்கும் பொறுப்பை தமிழகத்தின் மூத்த பாஜக தலைவர் ஒருவரிடம் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஒப்படைத்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறின. 2014 பொதுத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்த பாஜக, அடுத்து 2019ல் நடக்கவிருக்கும் தேர்தலிலும் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon