சுடச் சுடச் செய்திகள்

29 இந்திய நகரங்களில் நிலநடுக்க அபாயம்

தலைநகர் டெல்லி, புதுச்சேரி உட்பட 29 இந்திய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்க மையம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை, உலகளவில் நிலநடுக்க அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் ஒன் றாகக் கருதப்படும் இமயமலை வட்டாரத்தை ஒட்டி அமைந்து இருக்கின்றன. பாட்னா (பீகார்), ஸ்ரீநகர் (ஜம்மு =காஷ்மீர்), கொஹிமா (நாகலாந்து), கௌஹாத்தி (அசாம்), கேங்டாக் (சிக்கிம்), சிம்லா (இமாச்சலப் பிரதேசம்), டேராடூன் (உத்தரகண்ட்), இம்பால் (மணிப்பூர்), சண்டிகர் (பஞ்சாப், ஹரியானா) ஆகிய ஒன்பது மாநிலத் தலைநகரங்கள் ‘நிலநடுக்க மண்டலங்கள் 4, 5ன்’ கீழ் இடம்பெற்றுள்ளன. மண்டலம் 2 என்பது நிலநடுக்க அபாயம் குறைந்த பகுதியாகவும் 4, 5 ஆகியவை முறையே அதிக, மிக அதிக அபாயமுள்ள பகுதி களாகவும் அறியப்படுகின்றன.

ஒட்டுமொத்த வடகிழக்கு இந்தியாவும் ஜம்மு=காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத்தின் கட்ச் வளைகுடா, பீகார் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் அந்தமான்=நிக்கோ பார் தீவுகளும் நிலநடுக்கம் ஏற்பட அதிக அபாயமுள்ள பகுதிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதையடுத்து, அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் மேலும் 31 புதிய நிலநடுக்க ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று நில அறிவியல் அமைச்சின் செயலாளர் எம்.ராஜீவன் தெரிவித்தார். இந்தியாவில் இப்போது அத்த கைய 81 ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்கள் நிலநடுக்கக் காரணிகளை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, பதிவு செய்யும். இதன்மூலம் குறிப்பிட்ட பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள் ளதா என்பதை முன்கூட்டியே கணிக்க இயலும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon