ஊழல் அதிகாரிகளைக் களையெடுக்கும் இந்தியா

‘ஊழலற்ற இந்தியாவை அமைப்போம்’ என்று தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. முதற்கட்டமாக, ஒவ்வொரு துறையிலும் உள்ள ஊழல் அதிகாரிகளைக் களைய மோடியின் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேதுவாக, ஒவ்வோர் அமைச்சிலும் உள்ள ஊழல் பேர்வழிகளின் பட்டியலைத் தயாரிக்கும்படி அந்தந்த அமைச்சுகளின் கண்காணிப்புக் குழுக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ‘இந்தியா டுடே’ செய்தி தெரிவித்துள்ளது. வரும் 15ஆம் தேதிக்குப் பிறகு ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.

அதிகாரிகளின் பணி சம்பந்தப்பட்ட ஆவணங்களை உள்துறை அமைச்சு தொகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன், இம்மாதம் 5ஆம் தேதிக்குள் அந்தப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எல்லா அமைச்சுகளுக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் உள்துறை அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தப் பட்டியலில், ஊழல் புகார் குறித்த விசாரணையின்போதும் அல்லது அதற்குப் பிறகும் நேர்மையாக நடந்து கொள்ளாத அதிகாரிகளின், ஊழியர்களின் பெயர்களும் இடம்பெறும். உரிய அதிகாரியால் கையெழுத்திடப் பட்ட அந்தப் பட்டியல் பின்னர் மத்தியப் புலனாய்வுத் துறைக்கும் (சிபிஐ) மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கும் அனுப் பப்படும்.

அந்த அமைப்புகள், ஊழல் பட்டியலில் இடம்பிடித்துள்ளோரைத் தீவிர மாகக் கண்காணிக்கும். அவர்கள் தங்க ளது சொந்த நலனுக்காக அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள் கின்றனரா, முடிவுகள் எடுக்கின்றனரா என்று கண்காணிக்கப்படுவர். பெரிய தொகையை அபராதமாக விதிப்பது, பதவியிறக்கம் செய்வது, தேவைப்பட்டால் பணிநீக்கம் செய்வது என ஊழல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லப் படுகிறது.