வேன் மீது லாரி மோதியதில் சிறுவன் உட்பட 7 பேர் பலி

அரியானா மாநிலத்தின் கர்னல் மாவட்டத்தில் உள்ள மீருட் சாலையில் நேற்று வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “வேன் 21 பயணிகளுடன் ஹரித்துவாரில் இருந்து கர்னல் மாவட்டத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற பயணிகள் கல்பனா சாவ்லா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்,” என கர்னல் மாவட்டத்தில் உள்ள சடார் காவல் நிலைய தலைமை அதிகாரி மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மனோஜ் தெரிவித்தார். படம்: ஊடகம்

Loading...
Load next