காங்கிரஸ்: 22 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.15 கோடி பாஜக லஞ்சம்

பெங்களூரு: குஜராத்தில் காங் கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொரு வருக்கும் தலா ரூ.15 கோடி பணத்தை லஞ்சமாகக் கொடுத்து அவர்களை தங்கள் பக்கம் இழுப் பதற்கு பாஜக முயற்சி செய்துள்ள தாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. காங்கிரசின் லஞ்சக் குற்றச் சாட்டை மறுத்துள்ள பாஜகவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் பெங்க ளூருவில் பாஜகவுக்கு எதிராக குற்றம் சுமத்தி உள்ளனர். திருடன் ஒருவன் போலிசாரைத் தாக்கியது போல் அவர்களின் குற்றச்சாட்டு உள்ளது. இந்த அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளால் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது,” என்று கூறினார். இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார். “டெல்லி மேலவைக்குத் தேர் தல் நடைபெற உள்ளதால் குஜராத் தில் குதிரை வியாபாரம் படு ஜோராக நடக்கிறது. “சிபிஐ, அமலாக்கத்துறையை வைத்து எங்கள் கட்சி எம்எல்ஏக் களை பாஜக மிரட்டுகிறது.

பெங்களூரில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணிவகுத்துள்ளனர். குஜராத்தின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோயல் செய்தியாளர்கள் முன்பு பேசுகிறார். படம்: ஊடகம்