ஒட்டுமொத்த குடியிருப்பு விற்பனை சூடுபிடித்துள்ளது

ஒட்டுமொத்த குடியிருப்பு விற்பனை ஒப்பந்தம் மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. சொத்துச் சந்தையின் விலை ஏற்றத்தைக் குறைக்க 2013ல் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முன்னர் 2011ல் பரபரப்பாக இருந்தற்கு பிறகு இப்போதுதான் ஒட்டுமொத்த குடியிருப்பு விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது. சொத்துச் சந்தையில் அதிகரித்துவரும் நம்பிக்கையான நிலைமை, குறைந்திருக்கும் வட்டி விகிதம், புதுவீடுகள் விரைவாக விற்கப்படுவது, கட்டுப்படுத்தப்பட்ட நில விற்பனை போன்றவை இதற்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. 2016ல் மூன்று ஒட்டுமொத்த குடியிருப்பு விற்பனைகள் நடைபெற்றன. இவ்வாண்டு ஆறு குடியிருப்புகளும் ஒரு தொழிற்பேட்டையும் ஒட்டுமொத்த விற்பனையாகியுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என கருதப்படுகிறது.