சுடச் சுடச் செய்திகள்

இரண்டடுக்கு பேருந்து டாக்சி நிறுத்தத்தில் மோதி விபத்து

வீவோசிட்டி எதிரே உள்ள டாக்சி நிறுத்ததில் ‘டவர் டிரான்சிட்’ இரண்டடுக்கு பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. தெலுக் பிளாங்கா ரோட்டில் வீவோ சிட்டி எதிரே பஸ் நிறுத்தமும் டாக்சி நிறுத்தமும் குறைந்த இடைவெளியில் மிக அருகே அமைந்துள்ளன. நேற்று காலை 7.20 மணி அளவில் 97எண் பேருந்தை இப்பாதையில் ஓட்டிச்சென்ற ஓட்டுநர் பஸ் நிறுத்தத்தையும் டாக்சி நிறுத்தத்தையும் தவறுதலாகப் புரிந்துகொண்டதால் விபத்து ஏற்பட்டதாக ‘டவர் டிரான்சிட்’ பேச்சாளர் கூறினார். விபத்தினால் பயணிகள் எவரும் பாதிக்கப்படவில்லை. பேருந்திலிருந்த 8 பயணிகளும் வேறொரு பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon