பார்சிலோனாவிடம் வீழ்ந்தது ரியால் மட்ரிட்

மயாமி: பிரபல குழுக்களான பார்சிலோனா, ரியால் மட்ரிட் குழுக்கள் மோதிய நட்புமுறை ஆட்டத்தில் ஜெரார்ட் பிக்கே புகுத்திய கோலால் வெற்றி பெற்றது பார்சிலோனா. தனது அணிக்கான முதல் கோலைப் புகுத்தினார் மெஸ்ஸி. இவான் ரகிடிச் இரண்டாவது கோலைப் புகுத்த ரியால் மட்ரிட் குழுவின் தோல்வி கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இருந்தது. ஆனால், திடீரென விழித்துக்கொண்ட மட்ரிட் குழுவினர் முதல் பாதி ஆட்டம் முடிவதற்குள் இரண்டு கோல்களைப் புகுத்தி ஆட்டத்தைச் சமன் செய்ததும் ஆட்டம் மேலும் சுவாரஸ்யமானது. இந்நிலையில், பிக்கே புகுத்திய மூன்றாவது கோலால் 3-2 என்ற கோல் கணக்கில் நட்புமுறை ஆட்டத்தை வென்றது பார்சிலோனா. ஏற்கெனவே மான்செஸ்டர் யுனைடெட், சிட்டி குழுக் களிடம் தோல்விக் கண்ட மட்ரிட், கடைசியாக வெற்றியை ருசித்தது லா லீகா பட்டம் வென்றபோதுதான்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon