இந்தியாவின் முடிவிற்காக காத்திருக்கும் ஐசிசி

சென்னை: ஒலிம்பிக் போட்டிகளில் எப்படியாவது கிரிக்கெட் விளை யாட்டைச் சேர்த்துவிட வேண்டும் என்ற அனைத்துலக கிரிக்கெட் வாரியத்தின் கனவு பலிப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவைப் பொறுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக் கெட் சேர்த்துக்கொள்ளப்பட்டால், இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருந்தாலும் ஒலிம்பிக் மன்றத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கும் என்ப தால் இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் ஒப்புதல் தெரிவிக்க வில்லை. அனைத்துலக கிரிக்கெட் வாரியத்தை ஒலிம்பிக் மன்றம் அங்கீகரித்திருந்தாலும் முன் னணி அணிகள் இடம்பெற்றால் மட்டுமே கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்த்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்திய அணி இல் லாமல் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்க்க ஒலிம்பிக் மன்றம் முன்வருவது சந்தேகமே. ஆசிய நாடுகளில் கிரிக்கெட் பிரபலமடைந்து வந்தாலும் கிரிக் கெட்டின் உயிர்நாடியாக விளங்கும் இந்திய அணி இல்லாமல் ஒலிம் பிக் வெறும் கனவாகவே போய் விடலாம். இந்நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர்பான ஏலத்தில் பங்கேற்க வேண்டி உள்ளதால், பிசிசிஐ தனது முடிவைத் தெரிவிக்குமாறு ஐசிசி கேட்டுக் கொண்டது. ஐசிசி எந்த ஆர்வமும் காட்டாத நிலையில், இது தொடர்பாக அறிக்கையளிக்க நிர்வாகிகள் குழுவொன்றை நியமித்துள்ளது நீதிமன்றம். இக்குழுவின் பரிந்துரை இறுதி யாக இருக்கும் பட்சத்தில், பிசிசிஐயில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பக்கூடும். கிரிக்கெட் ஒலிம்பிக் விளை யாட்டாக மாறிவிட்டால் பிசிசிஐ யின் அதிகாரம் குறைந்துவிடும். அது மட்டுமல்லாமல் ஒலிம்பிக் மன்றத்தின் கீழ் செயல்பட வேண்டியிருக்கும் என்று பிசிசிஐ உறுப்பினர்கள் பலரும் கருதுகிறார்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்