ஆத்மிகாவின் ஆசைகள்

‘மீசைய முறுக்கு’ படத்தின் நாயகி ஆத்மிகாவுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெறும் நடிகையாக மட்டுமல்லாது பாடகியாகவும் ஜொலிக்கிறார். கணினித் துறையில் பட்டப்படிப்பை முடித்தவர், பெங்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஆறுமாத காலம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தவருக்கு, திடீரென அப்பணி அலுத்துப் போனதாம். உடனடியாக வேலையை விட்டு விலகியவர், இனிமேல் திரையுலகில் நடிப்பதுதான் லட்சியம் என்று வீட்டாரிடம் தெரிவிக்க, அவர்களும் உற்சாகப்படுத்தி உள்ளனர்.

“அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள். என் அப்பா பானுசந்திரனும் அம்மா நளினியும் இசைத் துறையிலும் கவனம் செலுத்தும்படி ஊக்கப்படுத்தினர். எனக்கும் இசை மீது ஆசை அதிகம். அதனால் கர்நாடக சங்கீதம், இந்துஸ் தானி இசை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். ஏற்கெனவே பக்தி இசைத் தொகுப்பில் இரு பாடல்கள் பாடியுள்ளேன்,” என்று சொல்லும் ஆத்மிகா, வாய்ப்பு கிடைத்தால் தனக்கும் பிற கதாநாயகிகளுக்கும் திரையில் பாட ஆர்வமாக உள்ளாராம். தன் திறமையைச் சோதித்து அதன் பிறகு இசையமைப்பாளர்கள் வாய்ப்பு தந்தால் போதும் என்றும் சொல்கிறார். திரையில் நடிப்பதற்கு முன்பு ஏராளமான விளம்பரங்களிலும் அம்மணி தலைகாட்டி உள்ளார்.

“நடிப்பில் ஆர்வம் ஏற்பட்ட பிறகு மனதில் சின்ன தயக்கம் இருந்தது. என்னால் அந்த வேலையை ஒழுங்காக தவறுகள் இன்றி செய்ய முடியுமா? என்ற சந்தேகம் வந்தது. எனவே நடிப்பில் நல்ல அனுபவங்களைப் பெற வேண்டும் என முடிவு செய்தேன்.