சுடச் சுடச் செய்திகள்

முதல் வெற்றி: சந்தானம் படக்குழு உற்சாகம்

சந்தானம் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’ படத்திற்கு தணிக்கைக் குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளித் துள்ளனர். இது அப்படக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “எங்களைப் பொறுத்தவரை இது முதல் வெற்றியாகவே கருதுகிறோம். படம் விரைவில் திரைகாண உள்ள நிலையில், தணிக்கைக் குழுவின் ஆதரவு எங்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள் ளது,” என்கிறார் படத்தின் இயக்குநர் ஆனந்த் பால்கி. கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சந்தானம் ஜோடியாக, ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் அவருடன் இணைந்து நடித்த வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாரா யணன் இசையமைத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவை யும் காதலும் நிறைந்த படமாக உரு வாகி இருக்கிறதாம் ‘சர்வர் சுந்தரம்’. எனினும் உணர்வு பூர்வமான காட்சிகளுக்கும் குறைவிருக்காதாம். சந்தானத்தின் தோற்றம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று படக்குழு அடித்துச் சொல்கிறது. அண்மையில் இப்படத்தை தணிக்கைக் குழு வுக்கு திரையிட்டுக் காட்டியுள்ள னர். படம் உருவாக்கப்பட்ட விதத்தைப் பாராட்டிய தணிக்கைக் குழுவினர்,

எந்தக் காட்சியையும் நீக்காமல், ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். படம் விரைவில் வெளியாக உள்ளது. ‘மன்னவன் வந்தானடி’, `சக்க போடு போடு ராஜா’, `ஓடி ஓடி உழைக்கணும்’ உள்ளிட்ட படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் சந்தானம். “கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பின்னர் சந்தானத் திடம் தென்படும் மாற்றங்கள் வியக்க வைக்கின்றன. “நகைச்சுவை நடிகராக இருந் தவர், தற்போது ஒரு கதாநாயக னுக்குரிய அனைத்து தகுதிகளை யும் தன்னிடம் வளர்த்துக் கொண்டுள்ளார்,” என்று மன தாரப் பாராட்டுகிறார் இயக்குநர் ஆனந்த் பால்கி.

‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon