காபூலில் ஈராக்கிய தூதரகம் அருகே போராளிகள் தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் ஈராக்கிய தூதரகத்திற்கு வெளியில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு போராளி தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அங்கு போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. அத்தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. போலிஸ் தலைமையகங்கள் மற்றும் ஈராக்கிய தூதரகம் அமைந்துள்ள பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அது என்றும் தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் ஈராக்கிய தூதரகத்தினுள் மறைந்திருந்தது போல் தெரிகிறது என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கில் மோசுல் நகரம் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டதை கொண்டாடும் வகையில் காபூலில் உள்ள ஈராக்கிய தூதரகம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சி நடந்த இரு வாரங்களில் அத்தாக்குதல் நடந்துள்ளது.

Loading...
Load next