ரியாவ் மாநிலத்தில் தீயை அணைக்க போராடும் குழுவினர்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ரியாவ், சுமத்ரா, கலிமந்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து அங்கு அவசர விழிப்புநிலை அறி விக்கப்பட்டுள்ளது. ரியாவ் மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்புக் குழுவினர் போராடி வருகின்றனர். அங்கு தீப்பற்றி எரியும் 550 ஹெக்டர் நிலப்பரப்பின் மீது இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 21 பில்லியன் லிட்டர் தண்ணீர் ஹெலிகாப்டர் மூலம் ஊற்றப்பட்டதாக அதி காரிகள் கூறினர். இந்த அளவு தண்ணீர் 11 நாட்களுக்கு சிங்கப்பூரின் மொத்த தண்ணீர் தேவைக்கு விநியோகிப்பதற்கு போதுமான தாகும். இந்தோனீசியாவில் தீப்பற்றி எரியும் இடங்கள் கடந்த மூன்று நாட்களில் 173லிருந்து 239 ஆக உயர்ந்துள்ளது துணைக்கோள படங்கள் மூலம் தெரிய வந் துள்ளது என்று தேசிய பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’