கத்தாருடன் பேச்சு நடத்த விரும்பும் 4 அரபு நாடுகள்

துபாய்: கத்தார் நாட்டுடன் அரசதந்திர உறவுகளை துண்டித்துக் கொண்ட நான்கு அரபு நாடுகள் கத்தாருடன் பேச்சு நடத்த தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. கத்தார் நாட்டுடனான அனைத்து விமானப் போக்கு வரத்து சேவைகளும் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டன. அத்துடன் கத்தார் நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்திக்கொள்வதையும் அந்த நாடுகள் தடை செய் துள்ளன. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் குழப்ப மான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்த்து வைக்க குவைத் மற்றும் துருக்கி முயன்று வருகின்றன. இந்நிலையில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடிப்பேசி, எட்டு வார காலமாக நீடிக்கும் பிரச் சினை குறித்து விவாதித்தனர். பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்திக் கொள்ள கத்தார் விரும்பினால் அந்நாட்டுடன் பேச்சு நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக அந்த நாடுகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு அந்த நாடுகள் விதித்த 13 கோரிக்கைகளை ஏற்க கத்தார் மறுத்துவிட்டது. தற்போது 6 கோரிக்கைகளை அந்த நாடுகள் முன்வைத்துள் ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon