சுடச் சுடச் செய்திகள்

இந்தியாவுக்குள் ஊடுருவி சுற்றித்திரிந்த சீன ராணுவம்

கிட்டத்தட்ட 50 சீன ராணுவ வீரர் கள் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் வழியே நுழைந்ததாக வும் சுமார் இரண்டு மணி நேரம் வரை அவர்கள் அப்பகுதியில் இருந்த தாகவும் இந்திய உள்துறை அமைச்சின் தகவல்கள் தெரி வித்துள்ளன. சென்ற மாதம் 25ஆம் தேதி காலை 9 மணியளவில் பரஹோட் டில் என்னும் பகுதியின் வழியாக இந்திய எல்லைக்குள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவ வீரர்கள் ஊடுருவிய தாகவும் அத்தகவல்கள் கூறின. அவர்கள் ஊடுருவிய வேளை யில் அப்பகுதியில் சிலர் கால் நடைகளை மேய்த்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் தங்களது கால்நடைகளோடு அந்த இடத்தை விட்டுச் செல்ல சீன ராணுவத் தினர் உத்தரவிட்டதாகவும் கூறப் பட்டது.

கடந்தாண்டு ஜூலை மாதமும் இதேபோன்றதொரு ஊடுருவலை சீன ராணுவத்தினர் மேற்கொண்ட தாக இந்திய ஊடகங்கள் குறிப் பிட்டன. இந்திய=சீன எல்லைக் கோட் டின் அருகே இதுபோன்ற எல்லை மீறல் சம்பவங்கள் இதற்கு முன் னர் நடந்திருந்தபோதிலும் மூன்று மாத கால சிக்கிம் எல்லை முற்று கையால் இரு நாடுகளுக்கும் இடையில் கசப்பான சூழல் உருவாகி உள்ளதால் ஊடுருவல் கள் முக்கியமானவையாகக் கரு தப்படுகின்றன.

கடந்த 1962ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் மூண்ட போருக்குப் பின்னர் ஆக நீண்ட கால முற்றுகையாக இது விளங்கு கிறது. இமாசல பீடபூமியான டோங் லாங் என்னும் தொலைதூரப் பகுதியில் சாலை அமைக்கும் சீன ராணுவத்தின் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் ஜூன் மாதம் இந்திய ராணுவம் மேற்கொண்ட தாகக் கூறப்பட்டது. சர்ச்சைக் குரிய அந்தப் பகுதி தனது டோக்லாம் வட்டாரத்தில் உள்ளது என்றும் தனது நாட்டுக்கே அது சொந்தம் என்றும் பூட்டான் கூறி வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon