மொத்தம் 5,291 வீவக வீடுகள் விற்பனைக்கு

வீவக எனும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மொத்தம் 5,291 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்தது. அவற்றில் 3,897 வீடுகள் தேவைக்கேற்ப கட்டப்படும் பிடிஒ வீடுகள். மேலும் 1,394 வீடுகள் விற்பனை ஆகாமல் எஞ்சியிருக்கும் வீடுகள். எஞ்சியிருக்கும் வீடுகள் இதற்கு முன்பாக ஒரு முறைதான் விற்பனைக்கு வரும். ஆனால் இப்போது முதல் முறையாக அவை மீண்டும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. 2016 நவம்பர் மாத எஞ்சிய வீட்டு விற்பனை நடவடிக்கைகளில் விற்பனை ஆகாத வீடுகள் இவை.

இவற்றில் பல வட்டாரங்களில் வெவ்வேறு விலைகளில் விற்கப்படும் பலதரப்பட்ட வீடுகள் அடங்கும். பிடிஓ வீடுகள் புக்கிட் பாத்தோக்கிலும் செங்காங்கிலும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் கிட்டத்தட்ட 71 விழுக்காடு வீடுகள் ஏற்கெனவே கட்டி முடிக்கப் பட்டுள்ளன என்றும் மீதமுள்ள வீடுகள் கூடியவிரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும் வீவக தெரிவித்தது. இந்த எண்ணிக்கையுடன் இவ்வாண்டு வீவக மொத்தம் 18,095 வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது. விண்ணப்பங்களை வீவக இணையத்தளத்தில் அடுத்த திங்கிட்கிழமை மேற் கொள்ளலாம். "புதிய விற்பனை முறையின்கீழ் வீடுகள் வாங்குவோர் மேலும் விரைவாகத் தங்களுக்குப் பிடித்த வீடுகளைத் தேர்ந்தெடுக்க முடியும். தற்போது மேலும் அதிகமான எஞ்சியிருக்கும் வீடுகளின் விற்பனை நடைபெறு கிறது," என்று வீவக குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!