சுடச் சுடச் செய்திகள்

பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது வழக்கு

பிராஸ் பசார் சாலையில் அமைந்துள்ள கார்ல்டன் ஹோட் டலில் சென்ற ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி 23 வயது பெண் ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக வியட்னாமிய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பிரிட்டிஷ் நாட்டவர் மீது விசாரணை நடைபெறுகிறது. டாம் தான் கோங், 22, மைக்கல் லே, 24, வூ தாய் சன், 24 ஆகிய மூவரும் செப்டம்பர் 9ஆம் தேதி 2 நாள் ‘அல்ட்ரா சிங்கப்பூர்’ நடன இசை விழாவிற்காக பிரிட்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துள்ளனர். இந்த மூவருடைய நண்பர், ரிச்சர்ட் எனும் ஆன் வியட் ட்ரின், 24, மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை இரவுநேர கேளிக்கை விடுதியில் சந்தித்தார். அப்போது அந்தப் பெண் குடிபோதையில் இருந்தார்.

பிறகு அப்பெண் கேட்டுக் கொண்டதை அடுத்து ஆன் தங்கியிருந்த கார்ல்டன் விடுதிக்கு அவர்கள் வந்தனர். அப்பெண்ணின் சம்மதத்துடன் பின்னிரவு 2.30 மணியளவில் ஆன் அவருடன் உடலுறவு கொண்டார். அப்போது ஆன்னின் நண்பர்கள் மூவரும் அறைக்குள் இல்லை. பின்னிரவு 4 மணியளவில் ஆன், அவரது நண்பர் கோங்கை ஹோட்டல் அறைக்குள் அனுமதிக்க கோங் தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதன் பின்னர் கோங் அறையைவிட்டு வெளியேற 4.25 மணியளவில் இரண்டாவது நபரான வூ அறைக்குள் வந்து அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தார். அவரைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திலேயே மூன்றாவது நபர் மைக்கல் அறைக்குள் வந்து அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது அந்தப் பெண் கண்விழிக்க இருவருக்கும் வாக்குவாதம் இடம்பெற்றது. அதற்குப் பிறகு காலை 6.30 மணியளவில் அப்பெண் ஹோட்டலை விட்டுச் சென்றார். ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த வழக்கில் மொத்தம் 24 சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon