சுடச் சுடச் செய்திகள்

உபியில் ஆயுதம் தாங்கிய கொள்ளை; சந்தேகப் பேர்வழி ஓட்டம்

சிங்கப்பூரின் உபி பகுதியில் நேற்று காலை ஆயுதந்தாங்கிய கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது. 301 உபி அவென்யூ 1ல் உள்ள வெஸ்டர்ன் யூனியன் கிளையில் காலை 10.15 மணிக்கு அச்சம்ப வம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட் டது. கையில் கத்தியுடன் வந்த ஆடவர் ஒருவர் அந்தப் பணப் பரிமாற்ற வங்கி ஊழியரை அணுகி $2,000 பணத்தைத் தருமாறு பலவந்தப்படுத்தியதாக போலிஸ் தெரிவித்தது. அதன் பின்னர் அந்த ஆடவர் தப்பி ஓடிவிட்டதாகவும் ஊழியருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவ்வறிக்கை கூறியது. மேலும், சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வங்கிக் கிளையினுள் வேறு யாரும் இல்லை என்றும் கூறப்பட்டது. வெள்ளை நிற தலைக்கவசம், கருப்பு நிற மேலங்கி, இருண்ட நிற நீள காற்சட்டை ஆகியவற்றை சந்தேக நபர் அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 1 மணிவாக்கில் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தியாளர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அக் கம்பக்கத்தில் உள்ளவர்களை அதி காரிகள் விசாரித்துக் கொண்டு இருந்தனர். அந்த வங்கிக் கிளை மூடப்பட்டு இருந்தது.

கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வெஸ்டர்ன் யூனியன் கிளை. கண்காணிப்புக் கருவியில் பதிவான சந்தேக நபரின் உருவம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon