வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநர் நீக்கம்

வா‌ஷிங்டன்: வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநரான அண்டனி ஸ்காராமுச்சியை அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிர டியாக நீக்கியுள்ளார். பதவியேற்ற பத்து நாட்களுக் குள் ஸ்காராமுச்சியின் பதவி நீக்கம் நடைபெற்றுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அவரை அதிபர் டோனல்ட் டிரம்ப் நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் சக ஊழி யர்கள் பற்றி தகாத வார்த்தை களால் பேசியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. வெள்ளை மாளிகையின் பேச் சாளர் சாரா ஹக்காபி சான்டெர்ஸ் வெளியிட்ட அறிக்கையில் “வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் பொறுப்பிலிருந்து அவர் வெளியேறுகிறார்,” என்றார்.

“திரு அண்டனி ஸ்காராமுச்சி யின் செயல்பாடு அதிபருக்குப் பிடிக்கவில்லை,” என்று அவர் கூறினார். செய்தியாளர்களிடம் சக ஊழி யர்கள் பற்றி ஸ்காராமுச்சி தெரி வித்த கருத்து அத்தகைய பொறுப் பில் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல என்று அதிபர் கருதுவதாகவும் பேச்சாளர் சொன்னார். கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாகப் பொறுப்பு ஏற்ற ஜான் கெல்வி, நியூயார்க்கின் செல்வந்தரும் நிதியாளருமான திரு ஸ்காராமுச்சியை நீக்க முடிவு செய்தார் என்று வெள்ளை மாளி கையின் மற்றொரு தகவல் தெரி விக்கிறது.