‘தெரு நாய்கள்’

தமிழகத்தில் எரிவாயு எடுப்பதற்காக குழாய்கள் பதிப்பதை எதிர்க்கும் படைப்பாக உருவாகி வருகிறது ‘தெரு நாய்கள்’. இதில் அப்புக்குட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரதிக், ‘கோலிசோடா’ நாயுடு, மைம்கோபி, இமான் அண்ணாச்சி ஆகியோரும் உள்ளனர். புதுமுகம் அக் ஷதா நாயகியாக அறிமுகமாகிறார். “டெல்டா மாவட்டத்தின் இன்றைய முக்கியப் பிரச்சினையாக இருக்கும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான பன்னாட்டு நிறுவனங்களின் எரிவாயுக் குழாய் பதிப்பதை எதிர்க்கும் பதிவாக இப்படத்தின் கரு அமைந்துள்ளது. கார்பரேட் அரசியலின் வளர்ச்சி சமுதாயத்தின் வீழ்ச்சி என்பதை இதில் ஆழமாகப் பதிவு செய்துள்ளோம்,” என்கிறார் இப்படத்தை இயக்கும் செ.ஹரிஉத்ரா.